பா.ஜ.க.வின் பாதுகாப்பிலிருந்து வெளியே வாங்க.. ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் நிபந்தனை

 

பா.ஜ.க.வின் பாதுகாப்பிலிருந்து வெளியே வாங்க.. ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் நிபந்தனை

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் ஹரியானாவில் தங்கி உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள விவகாரம் காரணமாக முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தனக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக முதல்வர் கெலாட் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் பாதுகாப்பிலிருந்து வெளியே வாங்க.. ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் நிபந்தனை

விரைவில் தொடங்க உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் அசோக் கெலாட் தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதை நிருபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அண்மையில், கட்சி தலைமை அவர்களை (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) மன்னித்தால் அவர்களை கட்டி அணைப்பேன், எனக்கு எந்த கவுரவ பிரச்சினையும் இல்லை என அசோக் கெலாட் தெரிவித்தார். தற்போது பா.ஜ.க.வின் பாதுகாப்பிலிருந்து வெளியே வந்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பேச தயார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வின் பாதுகாப்பிலிருந்து வெளியே வாங்க.. ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் நிபந்தனை

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியாவது: குருகிராமில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுகின்றன, கூட்டு பாலியல் பலாத்காரங்கள் நடக்கிறது, மக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ போலீசார் இல்லை, ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கு ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் (ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) ஹரியானா போலீஸ் பாதுகாப்பு, பா.ஜ.க.வின் நட்பு மற்றும் விருந்தோம்பலை கை விட்டு, வீட்டுக்கு திரும்ப வேண்டும் அதன் பிறகே பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை எப்படியாவது மீண்டும் தக்க வைத்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.