உ.பி. பத்திரிகையாளர் கொலை.. யோகி அரசை ரவுண்ட் கட்டி அடிக்கும் காங்கிரஸ்

 

உ.பி. பத்திரிகையாளர் கொலை..  யோகி அரசை ரவுண்ட் கட்டி அடிக்கும் காங்கிரஸ்

உத்தர பிரதேசம் காசியாபாத்தை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி. அவர் அண்மையில் தன்னுடைய உறவு பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த ஒரு கும்பலை தட்டி கேட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று தனது மகள்களுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் வழிமுறித்து அவரை அடித்ததுடன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விக்ரம் ஜோஷி நேற்று காலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

உ.பி. பத்திரிகையாளர் கொலை..  யோகி அரசை ரவுண்ட் கட்டி அடிக்கும் காங்கிரஸ்

பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை ரன்தீப் சுர்ஜேவாலா இது குறித்து டிவிட்டரில், ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதி கொடுத்த ராமர் ஆட்சியா இது? இது முழுமையான குண்டர்கள் ஆட்சி. உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளர் அல்லது சட்டத்தை பாதுகாப்பவர்களோ பாதுகாப்பாக இல்லை. ஆகையால் சாமானிய மக்கள் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும் என பதிவு செய்து இருந்தார்.

உ.பி. பத்திரிகையாளர் கொலை..  யோகி அரசை ரவுண்ட் கட்டி அடிக்கும் காங்கிரஸ்

உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு கூறுகையில், காசியாபாத் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு சோக சம்பவம். உத்தர பிரதேசத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை. இது காட்டு அரசு இல்லையென்றால் அப்புறம் இது என்ன. அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது, குற்றவாளிகள் மிகவும் துடிப்பாக செயல்படுகின்றனர். காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றால் மாலை வீட்டுக்கு திரும்புவமோ என மாநில மக்கள் கவலைப்படுகின்றனர் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி தன் மருமகளுக்கு எதிரான துன்புறுத்தலுக்கு எதிராக போராடியதால் கொல்லப்பட்டார். அந்த குடும்பத்துக்கு எனது இரங்கல். அவர்கள் (பா.ஜ.க.) ராமர் ஆட்சி தருவதாக வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் குண்டர்கள் ஆட்சியை கொடுக்கிறார்கள் என பதிவு செய்து இருந்தார்.