Home அரசியல் அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்... பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்… பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படம் வெளியாவதை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்... பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்

கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் மன்மோகன் சிங் ஜியின் அரசாங்கம் இருந்தபோது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது அமிதாப் பச்சன் அல்லது அக்ஷய் குமாராக இருந்தாலும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து டிவிட் செய்வது வழக்கம். தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. (கியாஸ்) விலையை உயர்த்தி வருகிறது. ஆனால் அவர்கள் இன்று இது குறித்து ஏன் பேசவில்லை?

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்... பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்
அமிதாப் பச்சன், அக்ஷய் குமார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயல்பட்டது. எனவே அவர்கள் அதை விமர்சிக்க முடியும். அவர்கள் மக்களுக்கும், நீதிக்கும் ஆதரவாக பேசவில்லை என்றால், மகாராஷ்டிரா காங்கிரஸ் அவர்களின் (அமிதாப் மற்றும் அக்ஷய்) படங்களை மாநிலத்தில் படமெடுக்க அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நானோ படோலின் இந்த பேச்சு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமிதாப் மற்றும் அக்ஷய் குமாருக்கு ஆதரவாக பா.ஜ.க. குரல் கொடுத்தது. இந்த சூழ்நிலையில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படம் வெளியாவதை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது.

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்... பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக கூறியதாவது: பேச்சு சுதந்திரத்தை கட்சி மதிக்கிறது. ஆனால் 2 நடிகர்களின் குறித்து கட்சி கேள்வி எழுப்பும். பல பிரபலங்கள் இதே மாதிரி அரசுக்கு ஆதரவாக டிவிட் செய்து வருவதே கவலைக்கு காரணம். அமிதாப் அல்லது அக்ஷய் குமாரின் பட சூட்டிங்கை அல்லது பட வெளியிட்டை காங்கிரஸ் தொண்டர்கள் தடுக்க (நிறுத்த) மாட்டார்கள். பேச்சு சுதந்திரத்தில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. நானா படோலிடம் நான் பேசினேன். அது போன்ற நிகழ்வுகள் (பட சூட்டிங் அல்லது பட வெளியீட்டை நிறுத்துவது) நிகழாது என்று அவர் என்னிடம் உறுதி அளித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்... பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

மத்திய பிரதேசத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். தமிழக...

‘நகையே இல்லாமல் நகைக்கடன்’… கூட்டுறவு வங்கியில் அரங்கேறிய பலே மோசடி அம்பலம்!

குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் 3 கோடி ரூபாய்க்கு மேல் நகைக் கடன் வாங்கி மோசடி செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது. தமிழக...

ஈரோட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் மற்றும் கடத்தூரில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

‘என்றும் மார்க்கண்டேயன்’ … வாக்கிங் போன ஸ்டாலினிடம் பெண் கேட்ட கேள்வி… ஜாலியாக உரையாடிய முதல்வர் – வைரல் வீடியோ

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பம்பரமாக சுழன்று வருகிறார். பல்வேறு திட்டங்கள், மாநில வளர்ச்சிப் பணிகள் என தீவிரம் காட்டி வரும் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை....
TopTamilNews