மோசடிகளால் பொருளாதாரம் சூறை.. நாடு நிதி அவசரநிலையை நோக்கி தள்ளப்படுகிறது.. மோடியை சாடிய காங்கிரஸ்

மோசடிகளால் பொருளாதாரம் சூறை.. நாடு நிதி அவசரநிலையை நோக்கி தள்ளப்படுகிறது.. மோடியை சாடிய காங்கிரஸ்

மோடி அரசின் மோசடி செயல்களால் பொருளாதாரம் சூறையாடப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: பொருளாதார சிதைவின் கரு மேகங்கள் நம்மை சுற்றி உள்ளது. உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் வேலைகள் அழிக்கப்பட்டன. வர்த்தகங்கள், சிறு மற்றும் நடுத்த தொழில்துறை பாழடைந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியை இடித்து வீழ்த்தப்பட்டதால் பொருளாதாரம் அழிக்கப்படுகிறது. இந்தியா ஒரு நிதி அவசரநிலை நோக்கி தள்ளப்படுகிறது.

மோசடிகளால் பொருளாதாரம் சூறை.. நாடு நிதி அவசரநிலையை நோக்கி தள்ளப்படுகிறது.. மோடியை சாடிய காங்கிரஸ்
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

மோடி அரசு கடந்த 6 ஆண்டுகளாக தனது மோசடி செயல்களால் பொருளாதாரத்தை சூறையாடிவிட்டது. அரசு தற்போது தனது திறமையின்மை மற்றும் குற்றத்துக்குரிய இயலாமையையும் கடவுளின் செயல் என்று சொல்கிறது. கடந்த 73 ஆண்டுகளில் இந்த அரசுதான் தனது சொந்த மோசடிகள் மற்றும் கொந்தளிப்புகளுக்கு கடவுளை குற்றம் சாட்டுவது துயரமானது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை நீக்குவதன்மூலம், சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பயந்து ஒடுகிறது.

மோசடிகளால் பொருளாதாரம் சூறை.. நாடு நிதி அவசரநிலையை நோக்கி தள்ளப்படுகிறது.. மோடியை சாடிய காங்கிரஸ்
பொருளாதார வீழ்ச்சி

இந்திய பிராந்தியத்தில் சீனாவின் வெட்ககேடான அத்துமீறல், இந்திய பொருளாதாரத்தின் தவறு, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது மற்றும் 12 கோடிக்கு அதிகமான வேலை இழப்புகள் குறித்து மோடி அரசு பதில் சொல்ல விரும்பவில்லை, கடந்த 73 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அரசு ஒரு அறிவிக்கப்பட்ட கடனாளி. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பெயரில் முதுகெலும்பாக நிற்கும் ஒரு அரசாங்கம் அவர்களை பொருளாதார அழிவு மற்றும் தற்கொலை வாசலுக்கு தள்ளுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.