பீகாரில் ஆட்சிக்கு வந்தால்… முதல்ல வேளாண் சட்டங்களை நீக்க மசோதா நிறைவேற்றுவோம்… காங்கிரஸ்

பீகாரில் ஆட்சிக்கு வந்தால்… முதல்ல வேளாண் சட்டங்களை நீக்க மசோதா நிறைவேற்றுவோம்… காங்கிரஸ்

பீகாரில் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையின் முதல் கூட்ட தொடரில் வேளாண் சட்டங்களை நீக்குவது தொடர்பாக மசோதா நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 28ம் தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த மகா கூட்டணி தனது பீகார் தேர்தல் அறிக்கையை (வாக்குறுதிகள்) வெளியிட்டது.

பீகாரில் ஆட்சிக்கு வந்தால்… முதல்ல வேளாண் சட்டங்களை நீக்க மசோதா நிறைவேற்றுவோம்… காங்கிரஸ்
காங்கிரஸ்

மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியல் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில் கூறியதாவது: தேஜஸ்வி யாத் தலைமையின்கீழ் நாங்கள் ஆட்சி அமைத்தால், முதலில் விதான் சபாவின் (சட்டப்பேரவை) முதல் கூட்டத்தொடரில் விவசாயத்துக்கு எதிரான 3 சட்டங்களை நீக்குவதற்காக மசோதா நிறைவேற்றுவோம்.

பீகாரில் ஆட்சிக்கு வந்தால்… முதல்ல வேளாண் சட்டங்களை நீக்க மசோதா நிறைவேற்றுவோம்… காங்கிரஸ்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

அனைத்து மண்டிகளையும் அழித்து விட்ட பிறகு விவசாயிகளுக்கு எப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்பதை பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாரால் சொல்ல முடியுமா? இந்த தேர்தல் தோல்வியின் அனுபவத்திற்கும், புதிய தலைமுறையினருக்கும் இடையிலான தேர்தல், இந்த தேர்தல் சுய சார்பு, முன்னேற்றத்துக்கும், பிரிவினை, வெறுப்புக்கும் இடையிலான தேர்தல், இந்த தேர்தல் புதிய திசைக்கும், அழிவுக்கும் இடையிலான தேர்தல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.