கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், மோடிக்கு ரகசிய புரிதல் இருக்கு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், மோடிக்கு ரகசிய புரிதல் இருக்கு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ரகசிய புரிதல் உள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கேரள முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கும் இடையே ரகசிய புரில் இருப்பதாக தெரிகிறது. அதானி குழுமத்திடமிருந்து 300 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை நீண்ட காலமாக 25 ஆண்டுகளுக்கு சுமார் ரூ.8,700 கோடிக்கு கேரள அரசு வாங்கும் முடிவு என்பது தங்க கடத்தல் வழக்கை மூடி மறைக்குமா? முதல்வர் மற்றும் இதர அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வாயிலாக எந்தவொரு எப்.ஐ.ஆர்.-ம் பதிவு செய்யப்படவில்லை, இதுவும் புரிதலின் ஒரு பகுதியா?

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், மோடிக்கு ரகசிய புரிதல் இருக்கு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
அதானி

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே உள்ள ரகசிய புரிதல் என்ன?. முதல்வர் விஜயனுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ன? அதானி குழுமத்திடமிருந்து ரூ.2.85 மற்றும் ரூ.2.90 விலையில் 300 மெகாவாட் காற்றாலை மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு கேரள அரசு வாங்குவது சரியானது அல்ல.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், மோடிக்கு ரகசிய புரிதல் இருக்கு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

சூரிய மின்சக்தி மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.90க்கு கிடைக்கிறது என்பதும் சரியானதல்ல. ஆனால் காற்றாலை மின்சாரம் ரூ.2.90க்கு கிடைக்கிறது என்பது கிட்டத்தட்ட ஒரு ரூபாய் அதிகமாகும். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜயன் ஆகியோர் இணைந்து கேரளாவின் ஒட்டுமொத்த மின்சாரத்தில் சூரிய மின்சக்தியின் ஒதுக்கீட்டை 2.75 சதவீதத்திலிருந்து 0.75 சதவீதமாக ஏன் குறைத்தனர்?. குறைக்கவில்லையென்றால் கேரளாவுக்கு மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.90 என்ற குறைந்த விலையில் கிடைத்து இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.