இந்திய எல்லை பகுதியில் சீனா புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.. மத்திய அரசை எச்சரிக்கும் காங்கிரஸ்

இந்திய எல்லை பகுதியில் சீனா புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.. மத்திய அரசை எச்சரிக்கும் காங்கிரஸ்

ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எல்லையில் இரு தரப்பும் ராணுவ துருப்புகளை பின்வாங்க ஒப்புக்கொண்டன. ஆனால் பேச்சுவார்த்தையின்படி சீனா படைகளை பின்வாங்கவில்லை. இதனையடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து சீன ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தனது துருப்புகளை பின்வாங்கியது.

இந்திய எல்லை பகுதியில் சீனா புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.. மத்திய அரசை எச்சரிக்கும் காங்கிரஸ்

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி, பட்ரோலிங் பாயிண்ட் 15, ஹாட் ஸ்பிரிங்\கோக்ரா பகுதியில் இந்திய-சீன துருப்புகள் வாங்கியதாக கடந்த சனிக்கிழமையன்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சூழ்நிலையில், பாங்கோங் டிசோ ஏரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் இந்திய பகுதியில் சீனா புதிய கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய எல்லை பகுதியில் சீனா புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.. மத்திய அரசை எச்சரிக்கும் காங்கிரஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், பாங்கோங் டிசோ ஏரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் இந்திய பகுதியில் சீனா புதிய கட்டுமானங்களை மேற்கொள்வது மிகவும் கவலையளிக்கிறது. நாட்டின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை ஆக்கிரமிக்க சீனர்கள் தவறாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கது அல்ல. புதிய செயற்கைகோள் படங்களை இந்திய அரசு அறிந்து கொண்டு, நாட்டை நம்பிக்கையில் கொண்டு செல்லுமா? பதிவு செய்துள்ளார்.