ரம்ஜான் ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

 

ரம்ஜான் ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

டெல்லி: ரம்ஜான் ஸ்பெஷலாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

ரம்ஜானை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.786 விலையில் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நேற்று முதல் (மே 23) அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் இந்த ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மொத்தம் 30 ஜிபி அதிவேக டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும்.

மேலும் ரூ.786 அளவுக்கு வாய்ஸ்காலும் பேச முடியும். இப்போது கேரளா, குஜராத், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இந்த ரீசார்ஜ் திட்டம் கிடைக்கப் பெறுகிறது. பி.எஸ்.என்.எல் இணையதளம், மொபைல் ஆப், ரீசார்ஜ் கடைகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பெற முடியும்.