Home சினிமா பிக்பாஸில் ரம்யாவுக்கு நான்காம் இடம்தானாம் – கசிந்த தகவல்கள்

பிக்பாஸில் ரம்யாவுக்கு நான்காம் இடம்தானாம் – கசிந்த தகவல்கள்

பிக் பாஸ் சீசன் 4 போட்டியின் இறுதி நாள் இன்று. யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் மிகுந்துள்ளது.

இந்த சீசனில் ரம்யா பாண்டியன், ரியோ, கேபிரியல்லா, பாலாஜி, ஆரி,  ஷிவானி, நிஷா, அர்ச்சனா, விஜே சுசித்ரா, ஆஜித், ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சோம சுந்தரம், அனிதா சம்பத், ஷனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இரண்டாம் வாரத்தில் ரேகா, அடுத்து வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, ஷனம், ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா, ஆஜித், ஷிவானி என இந்த வரிசைப்படி வெளியேற்றப்பட்டனர். மீதமிருப்பது ஆரி, ரியோ, ரம்யா, பாலா, சோம் கேபி ஆகிய ஆறு பேரும்தான்.

இவர்களில் பிக்பாஸ் டீல் வைத்த 5 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு கேபி வெளியேரி விட்டார். ஆரி, ரியோ, ரம்யா, பாலா, சோம் ஆகியோர் இறுதி போட்டியில் களம் காண்கிறார்கள்.

இறுதி நாளான இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் அதன் ஷூட்டிங் நேற்றிலிருந்து நடைபெறுவதாக தகவல்கள் சொல்கின்றன. அர்ச்சனா, ஷிவானி, கேபி ஆகியோரின் டான்ஸ் நிகழ்ச்சிகள் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் பலரும் எதிர்பார்த்தபடியே ஆரிதான். அவருக்குத்தான் பெருவாரியான ரசிகர்கள் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். பிக் பாஸ் குழு தொடக்கத்தில் ஆரி வெல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களின் எண்ணம் பாலா, ரம்யா அல்லது ரியோ மூவரில் ஒருவர்தான் டைட்டில் வின் பண்ணுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் கடைசி வாரங்களில் அதிக ரசிகர்கள் மிக அதிகமாக சமூக ஊடகங்களில் எழுதுவது, வாக்களிப்பது என்பது மட்டுமல்லாமல், ஆரிக்கு எதிராகப் பேசுபவர்களைக் குறிவைத்து வெளியேற்றுவது என்கின்ற பழக்கத்தை மேற்கொண்டனர்.

அதன்படி இப்பொழுது பைனலில் ஆரி வென்றிருக்கிறார். இரண்டாம் இடம் யாருக்கு… மூன்றாம் இடம் யாருக்கு… நான்காம் இடம்… யாருக்கு ஐந்தாமிடம் யாருக்கு… என்ற கேள்விகளும் அடுத்து எழுகின்றன.

ஆரியின் ரசிகர்கள் பாலாவுடன் சண்டை போடுவதைத் தவிர்த்து விட்டனர். ஏனெனில் கடந்த இரு வாரங்களாக ஆரியும் பாலாவும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். அதனால் ரசிகர்கள் பாலாவுக்கும் அதிக அளவில் வாக்குகள் செலுத்தியுள்ளனர். எனவே பாலா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்றும், மூன்றாம் இடத்தை அர்ச்சனா அண்ட் கோ டீமில் இருந்த ரியோ ராஜ் பிடித்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன அவை இன்னும் ஊர்ஜிதமான தகவல்கள் இல்லை என்றாலும் அங்கு பங்கேற்றவர்களின் குரலாக அவை கசிந்திருக்கின்றன.

நான்காம் இடம் இருப்பது ரம்யா பாண்டியன். பிக்பாஸ் டைட்டிலை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் நான்காம் இடத்தில் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஆரியுடன் அவர் கடுமையாக மோதி வந்ததால், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆரியின் ரசிகர்கள் ரம்யா மீது செம கடுப்பில் இருந்தார்கள். இரு வாரங்களுக்கு முன் ரம்யா பாண்டியனை வெளியேற்றும் விதமாக அவர்கள் வாக்குகள் செலுத்தினர். எப்படியோ இறுதியாக தப்பித்து ஷிவானி வெளியேற்றப்பட்டார். அதனால் அவருக்கு இப்பொழுது நான்காம் இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது என்று தகவல்கள் சொல்கின்றன.

தொடக்கத்தில் இருந்தே சோம் சேகர் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படுவார் எனும் வகையில்தான் ஆடி வந்தார். ஆனாலும் ஆரி ஆர்மி மற்றவர்களை வெளியேற்றுவதற்காக காட்டிய ஆர்வத்தால் சோம் சேகர் வீட்டுக்கு அருகே இருக்கும் படியான சூழல் அமைந்தது. அதனால் அவர் இந்தப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இவையெல்லாம் பிக்பாஸில் இருந்து கசியும் தகவல்களே. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை...

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

மனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...

தமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக - திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு...

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...
TopTamilNews