கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

 

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “புதிய கல்விக் கொள்கை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது, மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா அமைதியை விரும்புகிறது. இந்தியாவின் அமைதியை குலைக்க முயன்றால் சரியான பதிலடி தரப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

கொரோனா காலத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் ஏழைகளுக்கு உதவியாக இருந்தது. ஏழை மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதார ஊழியர்களுக்கும் தேசம் கடன்பட்டுள்ளது. அடர்த்தியான மக்கள்தொகை, மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இந்தியா, கொரோனா சவாலை எதிர்கொள்கிறது. உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் செயல்படுகின்றன, பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கினர்.” எனக் கூறினார்.