கைதி தப்பியோடிய விவகாரம்- 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

 

கைதி தப்பியோடிய விவகாரம்- 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கைதி தப்பியோடி விவகாரத்தில் 3 காவலர்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட சிறையில் இருந்த தண்டனை கைதி முகமது முகைதீன் என்பவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அவருடன் இளஞ்செம்பூர் காவல்நிலைய தலைமை காவலர் ராமபாண்டி, காவலர் அன்பரசன் மற்றும் தேரிருவேலி காவல் நிலைய காவலர் திராவிடசெல்வன் ஆகியோர் பாதுகாப்பிற்கு சென்றிருந்தனர்.

கைதி தப்பியோடிய விவகாரம்- 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

இந்த நிலையில் மருத்துவமனை செல்லும் வழியில் முகமது முகைதீன், காவலர்களிடம் இருந்து தப்பியோடினார். இதனை அடுத்து, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று ஏர்வாடி தர்கா பகுதியில் பதுங்கியிருந்த முகமது முகைதீனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை காவலர் ராமபாண்டி உள்ளிட்ட 3 காவலர்களையும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி., கார்த்தி உத்தரவிட்டார்.