ராமநாதபுரம் டி.ஆர்.ஓ உள்பட 38 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் கலெக்டர் அலுவலகம்

 

ராமநாதபுரம் டி.ஆர்.ஓ உள்பட 38 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் கலெக்டர் அலுவலகம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் டி.ஆர்.ஓ உள்பட 38 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் கலெக்டர் அலுவலகம்தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. சென்னைவாசிகள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போதுதான் மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ உள்பட 38 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300ஐ தொட்டுள்ளது.

ராமநாதபுரம் டி.ஆர்.ஓ உள்பட 38 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் கலெக்டர் அலுவலகம்டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூலம் இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா பரவியது என்பதை கண்டறிந்து சோதனையை அதிகப்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சென்னை விமானநிலையத்தின் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பயன்படுத்திய அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு இருந்த வரையில் கொரோனா கட்டுக்குள் இருந்தது, பயணிகள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.