“ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்” – ஆட்சியர் தினேஷ்குமார்

“ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்” – ஆட்சியர் தினேஷ்குமார்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் பொன்ராஜ் தெரிவித்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் பொன்ராஜ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

“ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்” – ஆட்சியர் தினேஷ்குமார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வருகிற பெரும் மழையை எதிர்நோக்கி அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக கூறினார். மேலும்,மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக, குந்துகால் துறைமுகத்தில் நிறுத்துவதற்காக, பாம்பன் தூக்குபாலத்தை காலை 10 மணி முதல் பகல் 12 வரை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

“ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்” – ஆட்சியர் தினேஷ்குமார்

மேலும், புயலால் பாதிப்பிற்குள்ளாக கூடிய 180 கிராமங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக கூறிய ஆட்சியர், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு 197 இ6டங்களில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், முகாம்களில் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதுடன், கால்நடைகளும் பாதுகாக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.