கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

 

கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி உலகமே மிக கடுமையான சூழலில் சிக்கித் தவிக்கின்றது. ராம நாமம் கஷ்டத்தை போக்கி அமைதியையும், ஆனந்தத்தையும் தரக்கூடியது. மந்திரங்களில் எளிமையான ஒரு மந்திரம் ‘ராம’ என்ற மந்திரமாகும். ராம நாமம் என்பது மிகவும் உன்னதமான நாமம் “க்ருஷ்ணேதி க்ருஷ்ணா”.

கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

நம்முடைய துக்கத்தையெல்லாம் போக்கடிப்பவர் ராமன். “ராமேதி ராமா” ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் ராமன் என்று பெயர். தசரதர் காலம் முதல் பழங்காலம் தொட்டு எத்தனையோ பேருக்கு வாழ்க்கையிலே துனபத்தையெல்லாம் போக்கி, ஆனந்தத்தை அளித்த பரம்பொருள். அந்த பரம்பொருளின் நாமம், மஹாவிஷ்ணு குரு வடிவத்திலே இருந்து ஸ்ரீ ராமனாக தசரத குமாரனாக அவதாரம் செய்தார். தசரதருக்கு வெகு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்ததனால் இந்த துன்பம் எல்லாம் நீங்குவதுடன் குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட பொழுது துன்பங்கள் எல்லாம் நீக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமன் என்ற பெயரை சூட்டினார் வசிட்டர். எத்தனையோ கோடிக்கணக்கான மக்களுடைய துன்பங்களை எல்லாம் கடக்கவைப்பது ராம நாமம். ‘ரா’ என்பது மூலாதாரம். ‘ம’ என்பது தலையின் உச்சியில் உள்ள ஆயிரம் இதழ் இடத்தைக் குறிக்கும். ‘ராம’ என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தாலே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி கிளம்பி, தலை உச்சிக்குச் சென்று விடும். ராம நாமத்தைச் சொல்லி வந்தாலே ஆத்ம ஞானம் ஏற்படும். ராமர் கூட இலங்கையை அடைவதற்கு பாலம் கட்டிச் சென்றார். ஆனால், ஆஞ்சநேயரோ ராம நாம பலத்தினால் கடலையே தாண்டிவிட்டார். ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம். எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம். பாவங்களிலிருந்து கடைந்தேறலாம். அதாவது ஏழு பிறவிகளில் நாம் செய்த தீவினைகளைப் பொடி பொடியாக்கும் இந்த நாமாவளி. ராம என்கிற இரண்டெழுத்தின் மந்திரத்தில் உச்சரித்து முன்ஜென்ம பாவத்தில் விடுபட்டு, எல்லாவித செல்வதை அடைந்து, தர்மத்தில் உயர்வு பெற்று, முக்தி என்ற ராமர் பாதம் அடைய ராம நாமம் சொல்லலாம். இந்த ராம நாமத்தை எப்பொழுதும் உச்சரிக்கலாம் எந்த ஒரு விபத்தும் தீமையும் நடைபெறாது. விஷ்ணு அவதாரத்தில் சிறந்தது ராம அவதாரம் என்பது உண்மை. ராமன் என்றாலே இன்பத்தைத் தருபவன் என்று அர்த்தம் அவர் எந்தவித துன்பத்திலும் ஆனந்தமாக இருப்பார்.

கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

ஸ்ரீராமரைவிட ராம நாமம் பெரிதாகக் கருதப்படுகிறது. எல்லா சஹஸ்ர நாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் விஷ்ணு சஹஸ்ர நாமம் என்று கூறப்படுகிறது. “ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன் உச்சரித்தால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அல்லது கடவுளின் விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை படித்த பலன் கிடைக்கும்.எப்படி “மூன்று முறை சொன்னால் எப்படி ஆயிரத்திற்குச் சமமாகும்” என்று கேட்கலாம். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது.

கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது சிவபெருமானின் சூட்சம கூற்று..

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!! இவ்வளவு சக்தி வாய்ந்த ராம நாமத்தை தெருவில் நடந்து போகும் போதும், ஆபீஸில் வேலை செய்யும் போதும், வீட்டில் சமையல் செய்யும் போதும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லலாம். ராம ராம!

கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

-வித்யா ராஜா