புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

 

புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

ராமநாதபுரம்

புரெவி புயல் காரணமாக சேதமடைந்த படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவ சங்கத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்த விசைப்படகுகளை, பாம்பன் தென்கடல் பகுதியில் நிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

இதன்படி, 116 விசைப்படகுகள் பாம்பன் தென்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பாம்பன் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று மற்றும் கடல்சீற்றம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தரை தட்டி நின்றன.
இதில் ஷர்புதீன் என்ற மீனவருக்கு சொந்தமான படகை கடலுக்குள் இழுக்கும்போது, முற்றிலும் சேதமடைந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இன்று அனைத்து மீனவ சங்க தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

இந்த கூட்டத்தில், சேதமடைந்த விசைப் படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும், புயல் மற்றும் மழை காலங்களில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க, தூண்டில் வளைவுடன் கூடிய துறைமுக வசதி அமைத்துத் தரவும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் கொண்டுசெல்ல விசைப்படகு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை டீசல் செலவு ஏற்பட்டதாகவும், இதனை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.