சரத் பவார் பா.ஜ.க., ஆர்.பி.எல்.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கணும் – ராம்தாஸ் அத்வாலே

சரத் பவார் பா.ஜ.க., ஆர்.பி.எல்.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி  அமைக்கணும் – ராம்தாஸ் அத்வாலே

இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும், தங்களுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ராம்தாஸ் அத்வாலே டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

சரத் பவார் பா.ஜ.க., ஆர்.பி.எல்.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி  அமைக்கணும் – ராம்தாஸ் அத்வாலே

சிவ சேனாவை ஆதரிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரசின் முடிவு எந்தவொரு ஆதாயத்தையும் தேசியவாத காங்கிரசுக்கு கொடுக்காது.பவார் சஹாப் நாட்டின் வளர்ச்சியை விரும்பினால், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்கிறது, அப்புறம் பிரதமர் மோடியை ஆதரவு அளிக்கும் முடிவை அவர் எடுக்க வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்.

சரத் பவார் பா.ஜ.க., ஆர்.பி.எல்.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி  அமைக்கணும் – ராம்தாஸ் அத்வாலே

மகாராஷ்டிராவில் இவை எல்லாம் நிகழ்ந்தால் பா.ஜ.க., ஆர்.பி.எல். மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் கூட்டணியை உருவாக்க முடியும். பின் இங்கு (மகாராஷ்டிரா) அரசாங்கம் நன்றாக செயல்படும், மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர சரத் பவார் முடிவு எடுக்க வேண்டும் என்பது வேண்டுகோள். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.