முதல்ல வேளாண் சட்டங்களை படியுங்க.. அப்புறம் கருத்தை சொல்லுங்க.. பாப் பாடகிக்கு பதிலடி கொடுத்த ராம்தாஸ் அதவாலே

முதல்ல வேளாண் சட்டங்களை படியுங்க.. அப்புறம் கருத்தை சொல்லுங்க.. பாப் பாடகிக்கு பதிலடி கொடுத்த ராம்தாஸ் அதவாலே

முதல்ல வேளாண் சட்டங்களை படியுங்க அப்புறம் கருத்து சொல்லுங்க என்று சர்வதேச பாப் பாடகி ரிஹானாவுக்கு ராம்தாஸ் அதவாலே பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியின் எல்லைகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டரை மாதங்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளது. பிரபல சர்வதேச பாப் பாடகி ரிஹானா தனது டிவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சி.என்.என். வெளியிட்டு இருந்த செய்தியை பதிவேற்றம் செய்து, நாம் இதை பற்றி ஏன் பேசவில்லை? என்று பதிவு செய்து இருந்தார். ரிஹானாவின் இந்த பதிவுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதேசமயம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்ல வேளாண் சட்டங்களை படியுங்க.. அப்புறம் கருத்தை சொல்லுங்க.. பாப் பாடகிக்கு பதிலடி கொடுத்த ராம்தாஸ் அதவாலே
ராம்தாஸ் அதவாலே

ரிஹானா டிவிட் தொடர்பாக இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்தாஸ் அதவாலே கூறியதாவது: எவரும் தாங்கள் விரும்புவதை ஆதரிப்பது அல்லது ஆதரிக்காமல் இருப்பது தனிப்பட்ட விருப்பம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது ரிஹானா அல்லது ஒரு தொழில்துறையை சேர்ந்த வேறு யாராக் இருந்தாலும், அவர்கள் கருத்தை உருவாக்குவதற்கு முன் வேளாண் சட்டங்களை படிக்க வேண்டும். இது விவசாயிகளின் நலனுக்கானதா இல்லையா என்று கூட தெரியாமல் சட்டத்தை எதிர்ப்பது நல்லதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்ல வேளாண் சட்டங்களை படியுங்க.. அப்புறம் கருத்தை சொல்லுங்க.. பாப் பாடகிக்கு பதிலடி கொடுத்த ராம்தாஸ் அதவாலே
தில்ஜித் டோசன்ஜ்

அதேசமயம் பிரபல பாடகர் மற்றும் நடிகருமான தில்ஜித் டோசன்ஜ், ரிஹானாவுக்காக ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். நேற்று மதியம் 1.30 மணி அளவில், ரிஹானாவுக்காக எழுதப்பட்ட ரிரி என்ற பாடலை அவர் வெளியிட்டார். தில்ஜித் டோசன்ஜ் ஆரம்பம் முதலே விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.