மதுரையில் ரத யாத்திரை மறுப்பு: மாநகர காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு!

 

மதுரையில் ரத யாத்திரை மறுப்பு: மாநகர காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு!

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெறுகிறது. ராமர் கோவில் கட்டும் பணிக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடம் எங்கள் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமர் கோவிலுக்கு நிதி வசூலிக்க ரத யாத்திரை நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

மதுரையில் ரத யாத்திரை மறுப்பு: மாநகர காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு!

போலீஸார் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். தனி நீதிபதி விசாரித்து நிபந்தனைகளுடன் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகும் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மார்ச் 1ஆம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.