போலி சான்றிதழ் மூலம் போலீஸான நபர்: 23 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

போலி சான்றிதழ் மூலம் போலீஸான நபர்: 23 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது இவருக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் கிடைத்து மதுரையில் தலைமை காவலராக உள்ளார்.

போலி சான்றிதழ் மூலம் போலீஸான நபர்: 23 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

இந்நிலையில் காவலர் முருகன் மோசடி அடிப்படையில் போலீசில் பணிக்கு சேர்ந்ததாக மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் விசாரணை செய்ததில் முருகன் மோசடி செய்து பணியில் சேர்ந்து இருப்பது தெரியவந்தது.

போலி சான்றிதழ் மூலம் போலீஸான நபர்: 23 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

அதாவது முருகன் தனது போலியான சாதி சான்றிதழ் மற்றும் தந்தை பெயரை மாற்றி தான் காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 23 ஆண்டுகள் கழித்து முருகன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பது அம்பலமாகியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.