“ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், அரசாணை வெளியீடு” – முதலமைச்சர்

 

“ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், அரசாணை வெளியீடு” – முதலமைச்சர்

ராமநாதபுரம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும், அவரது சிலைக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், உதயகுமார், பாஸ்கரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

“ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், அரசாணை வெளியீடு” – முதலமைச்சர்

முன்னதாக, தேவர் நினைவிடம் சென்ற முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, நினைவிட பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,

“ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், அரசாணை வெளியீடு” – முதலமைச்சர்


ஆளுநர் ஒப்புதல் வழங்க கால தாமதமானதால் தற்போது அரசாணை வெளியிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்தாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்காக தான் அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்ற இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளதாக கூறிய முதலமைச்சர், தானும் அரசு பள்ளியில்

“ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், அரசாணை வெளியீடு” – முதலமைச்சர்

படித்த மாணவன் தான் என்றும், எனவே மாணவர்களின் உணர்வை மதித்து இந்த அரசாணையை வெளியிட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும், சமூகநீதி பாதுகாக்க பட வேண்டும் என்று கூறிய முதலமைச்சர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவை நினைவாக மாற்ற கிராமத்திலிருந்து, நகரம் வரை உள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் காலதாமதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அது எடுபடாது என்றும் முதலமைச்சர் கூறினார்.