முதுகுளத்தூர் அருகே பழங்கால முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

முதுகுளத்தூர் அருகே பழங்கால முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பழங்கால முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழகொடுமலூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் இன்று தொழிலாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது, பழங்கால முதுமக்கள் தாழி ஒன்று தென்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் அருகே பழங்கால முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

காற்று சென்றுவர துளைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த முதுமக்கள் தாழியில், இறந்தவரின் உடலை வைத்து எரித்ததன் அடையாளமாக, எரிந்த நிலையில் உள்ள எலும்புகள் கிடைத்திருக்கிறது.

முதுகுளத்தூர் அருகே பழங்கால முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தற்போது கீழடியில் அகழாய்வு பணி முடிந்திருந்த நிலையில், வைகை ஆற்றின் துணை நதியான பரளை ஆற்றுப்படுகையில் உள்ள மேலக்கொடுமலூர், கீழ கொடுமலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு செய்ய வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.