சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… வரவேற்ற ராமதாஸ்!

 

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… வரவேற்ற ராமதாஸ்!

2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சியமைந்த உடன் 1987ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் 21 உயிர்நீத்தார்கள். அவர்களுக்கும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் ஏ. கோவிந்தசாமிக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியைக் கொடுத்தார். அதனை நிறைவேற்றும் வகையில் இன்று பேரவையில் அறிவித்தார்.

M.K.Stalin on Twitter: "Greeted and wished Dr. Ramadoss at his  granddaughter's wedding. http://t.co/Eb8RAq2bUi"

21 போராளிகளுக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும்; அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “இந்தியா சந்தித்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம் என்றால் அது வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி எனது தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் தான். ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேறுவதற்காக உரிமை கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, கொடூரமானத் தாக்குதல் உள்ளிட்ட பல வழிகளில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர்.

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… வரவேற்ற ராமதாஸ்!

இந்தத் தாக்குதலில் சமூக நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாவீரர்கள் கொல்லப்பட்டனர். 21 சமூகநீதிப் போராட்டக்காரர்களும் துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் எனது தலைமையில் வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது. அத்தகைய சமூகநீதிப் போராட்டத்திலிருந்து உருவானது தான் பாமக. பாமகவின் சமூகநீதிப் பயணம் தடையின்றி தொடரும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.