முழு ஊரடங்கை முழுமையாக மதித்து கொரோனாவை வெல்வோம்! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

முழு ஊரடங்கை முழுமையாக மதித்து கொரோனாவை வெல்வோம்! – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கை முழுமையாக பின்பற்றி கொரோனாவை வெல்வோம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கை முழுமையாக மதித்து கொரோனாவை வெல்வோம்! – ராமதாஸ் வலியுறுத்தல்இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இன்று நள்ளிரவு முதல் இம்மாத இறுதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதை வெறுப்பாக கருதாமல் வாய்ப்பாக நினைத்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த மே மாதம் இதே நாளில் 7117 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் 5 மடங்காக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே சென்னையில் கொரோனா வைரஸ் நோய் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். கொரோனா வைரஸ் நோய்ப் பரவலுக்கு நாம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மறந்தது தான் முக்கியக் காரணம்.

முழு ஊரடங்கை முழுமையாக மதித்து கொரோனாவை வெல்வோம்! – ராமதாஸ் வலியுறுத்தல்அதன் விளைவாகத் தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் படவுள்ளது. இந்த ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் நடமாடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவை மதிக்கப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு, மாநில அரசுகள் கூறிய அறிவுரைகளை மதிக்கத் தவறினோம். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; வெளியில் சென்று திரும்பும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்ட அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டோம். அதன் விளைவு… எப்போது கொரோனா நம்மை தாக்குமோ? என்ற அச்சத்தில் உறைந்து கிடைக்கிறோம். அனைத்துக்கும் காரணம் நமது அறியாமை அல்ல…. அலட்சியம், அலட்சியம் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

முழு ஊரடங்கை முழுமையாக மதித்து கொரோனாவை வெல்வோம்! – ராமதாஸ் வலியுறுத்தல்சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்றிரவு முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் நிலையில், அதையாவது நாம் மதித்து நடக்க வேண்டும். அதன் மூலம் தான் கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு மருத்துவம் அளிக்க முடியும். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், முழு ஊரடங்கு காலத்தில் வீடுகளை விட்டு வெளியில் வரும் எண்ணத்தையே கைவிடுங்கள். தவிர்க்க முடியாமல் வீடுகளை விட்டு வெளியில் வந்தால், முகக் கவசம் அணிதல், கையுறை அணிதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். அதன்மூலம் சென்னையை கொரோனா இல்லாத நகரமாக்க உதவ வேண்டும்.
உங்களது குடும்பத்தில் எவருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். அதேபோல், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும். 12 நாட்கள் முழு அடைப்பு முடிவதற்குள் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்த முழு ஊரடங்கு முடியும் போது கொரோனா இல்லாத சென்னை மலர வேண்டும்” என்று கூறியுள்ளார்.