10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

 

10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றாலும், 10ம் வகுப்புத் தேர்வை நடத்தியே தீருவது என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தெலங்கானாவில் 10ம் வகுப்பில் படித்த அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக நேற்று நீண்ட அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார்.

10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்இந்த நிலையில் இன்று ட்வீட்டில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 11-ம் வகுப்பில் ஒரு தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பில் ஒரு தேர்வை எழுதாத 35,000 மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்!

http://


அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கில் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்று அரசே எச்சரித்துள்ள நிலையில் தேர்வுகள் சாத்தியமல்ல. எனவே மாணவர்கள் நலன் கருதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்.