• February
    24
    Monday

Main Area

Main



பிடுங்கி எறிந்து விடுவேன்... ஆளும் கட்சிகளுக்கு எதிராக பாமக ராமதாஸ் கொந்தளிப்பு..!

ராமதாஸ்
ராமதாஸ்

அனைத்தையும் பிடுங்கி எறிந்து விடலாமா? என்ற அளவுக்கு என்னை சோதிக்கிறது என பாமக நிறுவனர் ராம்தாஸ் கொந்தளித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தைலாபுரம் தோட்டத்திலுள்ள @BSNL_TN தொலைபேசி இணைப்பு அடிக்கடி பழுதடைந்திருப்பது குறித்து சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் பதிவு செய்திருந்தேன். அதை தொடர்ந்து வந்த அதிகாரிகள்  சரி செய்தனர். அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் பழுதாகிவிட்டது. பழுதடைவதில் வேகம் என்றால் அது @BSNLCorporate

Ramadoss

உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்கள். அந்த வரிசையில் பிஎஸ்என்எல் சேவை மட்டும் தான் மாறாதது, தேறாதது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை வெறுக்க வைக்கும் வகையில் மோசமான சேவைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல்.! 

 

 நான் தரைவழி தொலைபேசியை நேசிப்பவன். ஆனால், எனது இல்லத்தில்  உள்ள @BSNL_TN
 தரைவழி இணைப்புகள் அனைத்தையும் பிடுங்கி எறிந்து விடலாமா? என்ற அளவுக்கு அதன் சேவை என்னை சோதிக்கிறது. இதே நிலை நீடித்தால் பிஎஸ்என்எல்  ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் கட்டாய ஓய்வு நிச்சயம்’’ என அதிருப்தியை தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.