தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் சூசக ட்வீட்!!

 

தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் சூசக ட்வீட்!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதனால் இனி தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக விநாயகர் சிலை, இ-பாஸ் உள்ளிட்ட விவகாரங்களால் பாஜக – அதிமுக கூட்டணியில் பிரச்னை நீடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் சூசக ட்வீட்!!

ஆனால் பாஜக-அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி தொடரும் என முதல்வர் பழனிசாமியும் பாஜக தலைவர் எல்.முருகனும் தெரிவித்து வருகின்றனர். திமுகவுடனும் பாஜக கூட்டணி வைக்கும் என பொன். ராதாகிருஷ்ணனும், கூட்டணியை விட்டு பாஜக போனால் மகிழ்ச்சியே என முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜாவும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்றைய பொழுது நிஜமில்லை… நாளைய பொழுதும் நிச்சயமில்லை…. இன்றைக்கும் மட்டும் தான் நம் கையில்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் தேர்தல் கூட்டணி குறித்துதான் சூசகமாக குறிப்பிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.