அதிர்ச்சியளிக்கிறது… உடனடி நடவடிக்கை தேவை : ராமதாஸ் ட்வீட்!

 

அதிர்ச்சியளிக்கிறது… உடனடி நடவடிக்கை தேவை : ராமதாஸ் ட்வீட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வரும் பெற்றுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல், 18ஆம் தேதி மாலை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் நாலியா இடையே கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் வலுப்பெறும் என்பதால், மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியளிக்கிறது… உடனடி நடவடிக்கை தேவை : ராமதாஸ் ட்வீட்!

இருப்பினும், நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கரைதிரும்பவில்லை. அவர்களுக்கு புயல் பற்றிய தகவல் சென்றடைந்ததா என்பது தெரியவரவில்லை. கேரளாவின் கொச்சி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், டவ்-தே புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்க தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியளிக்கிறது… உடனடி நடவடிக்கை தேவை : ராமதாஸ் ட்வீட்!

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், கொச்சி அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் டவ்-தே புயலில் சிக்கி காணாமல் போயிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களை மீட்டு, காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்! புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்கள் எங்கு தவிக்கிறார்கள் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடலோரக் காவல் படையினரை உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்த தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.