வன்னியர்களே… அதிமுகவை ஆதரியுங்கள் – பாமக நிறுவனர் ராமதாஸ்

 

வன்னியர்களே… அதிமுகவை ஆதரியுங்கள் – பாமக நிறுவனர் ராமதாஸ்

வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னியர்களே… அதிமுகவை ஆதரியுங்கள் – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதல்வாரமே தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி, பாமக கூட்டணி நழுவாமல் இருக்க வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது பாமகவினருக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது. இதனால் அதிமுகவுடனான தங்களது கூட்டணியை பாமகவினர் உறுதி செய்துவிட்டனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் வென்றார்கள்!.வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.