2021 தேர்தலில் 60 இடங்களில் நாம் வெற்றிப்பெற்றாலே நாம் நினைத்தது நடக்கும்- ராமதாஸ்

 

2021 தேர்தலில் 60 இடங்களில் நாம் வெற்றிப்பெற்றாலே நாம் நினைத்தது நடக்கும்- ராமதாஸ்

சமூக முன்னேற்றச் சங்க உறுப்பினர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

ராமதாஸ் எழுதியுள்ள மடலில், “2021 தேர்தலில் 60 இடங்களில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். 60 இடங்களில் நாம் வெற்றி பெற்று விட்டால், அதன் பின்னர் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாமகவுக்கு ஆதரவான களச் சூழலை உருவாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

2021 தேர்தலில் 60 இடங்களில் நாம் வெற்றிப்பெற்றாலே நாம் நினைத்தது நடக்கும்- ராமதாஸ்

சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செய்துவருகின்றன. அதிமுக தலைவர்கள் கட்சியின் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். அதில் சில முரண்பாடுகளும் அதிருப்தியும் கூட நிலவிவருகிறது. இந்த சூழலில் அதிமுகவுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி சேர்ந்த பாமக, இந்த தேர்தலில் அதையே தொடர விரும்புகிறது. ஆனால் அதற்கு ஈடாக தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிமுக அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் வரும் தேர்தலில் 60 இடங்களை நாம் கைப்பற்ற வேண்டுமென ராமதாஸ் தனது சமூகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.