கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கலாம்; ஆனால் அதைக் கட்டியது… – அன்புமணி புகழ் பாடும் ராமதாஸ்

கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கலாம்; ஆனால் அதைக் கட்டியது… – அன்புமணி புகழ் பாடும் ராமதாஸ்

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள தேசிய மூத்த குடிமக்கள் கவனிப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அந்த மூத்த குடிமக்கள் கவனிப்பு மையத்தைக் கட்டியதே நாங்கள்தான் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கலாம்; ஆனால் அதைக் கட்டியது… – அன்புமணி புகழ் பாடும் ராமதாஸ்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “உங்களுக்குத் தெரியுமா? சென்னையில் 750 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார். தேசிய மூத்த குடிமக்கள் கவனிப்பு மையம் தான் புதிய சிறப்பு மையமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா?

தேசிய குடிமக்கள் கவனிப்பு மையத்தை சென்னையில் அமைக்க ஆணையிட்டதும், அதற்காக 2008ஆம் ஆண்டிலேயே ரூ. 112 கோடி ஒதுக்கீடு செய்ததும் 2004-2009 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதலாவது ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். எனவே, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று தெரியுமா என்று பலரும் ராமதாஸிடம் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.