“நிலைப்பாற்றை மாற்றிக் கொள்ளுங்கள் ஸ்டாலின்” – வலியுறுத்தும் ராமதாஸ்!

 

“நிலைப்பாற்றை மாற்றிக் கொள்ளுங்கள் ஸ்டாலின்” – வலியுறுத்தும் ராமதாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை ஓரளவாவது காக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தில் குறுவை பருவ நெற்பயிர் இத்திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. நடப்பு குறுவை பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.

“நிலைப்பாற்றை மாற்றிக் கொள்ளுங்கள் ஸ்டாலின்” – வலியுறுத்தும் ராமதாஸ்!

இதனால் மேற்கண்ட பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் நெல், தட்டைப்பயறு ஆகியவற்றுக்குக் காப்பீடு வழங்கப்படாது என்பது பெரும்பான்மையான உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெற்பயிருக்குக் காப்பீடு வழங்காமல், பிற பயிர்களுக்கு மட்டும் காப்பீடு வழங்குவதால் பயன் இல்லை. குறுவைப் பருவத்தில் காப்பீடு செய்யப்படும் பயிர்களின் சாகுபடி பரப்பை விட, நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு மிகவும் அதிகமாகும். பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள நெருக்கடியை புரிந்துகொள்ள முடிகிறது.

“நிலைப்பாற்றை மாற்றிக் கொள்ளுங்கள் ஸ்டாலின்” – வலியுறுத்தும் ராமதாஸ்!

ஒருபுறம் இத்திட்டத்திற்கான பங்களிப்பை மத்திய அரசு 49 விழுக்காட்டில் இருந்து 25-30% என்ற அளவுக்கு குறைத்து விட்டது. மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவு அதிகரித்து விட்டதால் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் நெருக்கடி அளிக்கின்றன. ஆனால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டியது அரசுதான். மாறாக, குறுவை நெல்லுக்குக் காப்பீடு வழங்க மறுப்பதன் மூலம் இந்த நெருக்கடியை உழவர்களின் தலையில் சுமத்திவிட்டு, அரசு விலகிக் கொள்வது நியாயமல்ல. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

“நிலைப்பாற்றை மாற்றிக் கொள்ளுங்கள் ஸ்டாலின்” – வலியுறுத்தும் ராமதாஸ்!

குறுவை நெல் சாகுபடி செய்வதே சூதாட்டமாக மாறி விட்ட நிலையில், காப்பீடு வழங்குவது மட்டும்தான் உழவர்கள் மத்தியில் நம்பிக்கையையும், ஆதரவையும் வழங்கும். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறுவை சாகுபடி என்பதே பழங்கதை ஆகிவிடும். அத்தகைய நிலை ஏற்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. குறுவை நெற்பயிருக்கும், தட்டைப் பயிருக்கும் பயிர்க்காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க்காப்பீடுகளுக்கு பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு இரு வாரங்கள் நீட்டிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.