தமிழக அரசு கேட்டதில் 5% மட்டுமே ஒதுக்கீடு… புரெவி புயல் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழக அரசு கேட்டதில் 5% மட்டுமே ஒதுக்கீடு… புரெவி புயல் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்புகள் பற்றியும், அதற்காக நிவாரணத் தொகை வழங்குவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட 5 மாநிலங்களுக்குக் கூடுதல் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.3,113 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதில் தமிழகத்துக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி நிதியும் என மொத்தம் ரூ.286.91 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு கேட்டதில் 5% மட்டுமே ஒதுக்கீடு… புரெவி புயல் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க ராமதாஸ் வேண்டுகோள்!

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதி உதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றைச் சரிசெய்ய இந்த உதவி போதுமானதல்ல.

தமிழக அரசு கேட்டதில் 5% மட்டுமே ஒதுக்கீடு… புரெவி புயல் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க ராமதாஸ் வேண்டுகோள்!

புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.5264.38 கோடி நிதி உதவி கோரப்பட்டிருந்தது. ஆனால் அதில் 5 விழுக்காடு மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளைச் சரிசெய்ய மத்திய அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.