40 ஆண்டு கால கனவு நிறைவேறியது; ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்- ராமதாஸ்

 

40 ஆண்டு கால கனவு நிறைவேறியது; ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்- ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா, அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.

40 ஆண்டு கால கனவு நிறைவேறியது; ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்- ராமதாஸ்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “இதன்மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். வன்னியர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு என்ற இலக்கையும் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும்.

40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி, ஆனந்த கண்ணீரில் நனைகிறேன். வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்த முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி” என தெரிவித்தார். இதனிடையே முதல்வர் பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்க உள்ளார். மேலும் அதிமுக- பா.ம.க இடையே இன்றே தொகுதி பங்கீடு இறுதி ஆகவும் வாய்ப்புள்ளது.