செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் காரை ஏற்றி சென்ற அன்புமணி ராமதாஸ்!

 

செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் காரை ஏற்றி சென்ற அன்புமணி ராமதாஸ்!

வன்னியர்களுக்கு இருபது சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தலைமைச்செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அப்போது வன்னியர்களுக்கு 20சதவிகித இட ஒதுக்கீடு வழங்குமாறு அன்புமணி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் காரை ஏற்றி சென்ற அன்புமணி ராமதாஸ்!

முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் மனு அளித்துள்ளோம். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுக்க பாமக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். எங்களது போராட்டம் 40 ஆண்டு காலமாக நீடித்துவருகிறது.” எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அன்புமணி ராமதாஸ் அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தார். மேலும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் செய்தியாரை மிரட்டும் தோணியில் கை காண்பித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதை கேட்கச் சென்ற ஒளிப்பதிவாளர் கால் மீது காரை ஏற்றி விட்டு அன்புமணி ராமதாஸின் ஆதரவாளார்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது