யார் அந்த தலைவர்..? கருணாநிதி சொன்னதாக சர்ச்சையைக் கிளப்பிய ராமதாஸ்!

அந்த பெரிய தலைவரை நம்ப வேண்டாம் என்று கருணாநிதி தன்னிடம் கூறியதாக புதிய சர்ச்சை ஒன்றை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடக்கிவைத்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், “திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.


இந்த ட்வீட்டுக்கு பலரும் பலவிதமான பதிலை அளித்து வருகின்றனர். அதில் அதிகமானோர் அந்த தலைவரே நீங்கள்தான் ஐயா என்று நக்கல் செய்துள்ளனர். ஒருவர், “கலைஞர் சிறந்த சிந்தனையாளர் ..நக்கலடிப்பதிலும்…. உங்களை வைத்துக்கொண்டே உங்களை நக்கலடித்துள்ளார்….மிகச்சிறப்பு” என்று கூறியுள்ளார். மறைந்த ஒருவரைக் குறிப்பிட்டு இப்படி பதிவிடுவது சரியா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Most Popular

ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லை! – ஹரியானா முதல்வர் திட்டவட்டம்

ஹரியானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள விவகாரத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தன்...

பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்..

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவின் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு 18 வயது பெண்ணும் அவரின் தாயும் பல நாட்களாக அந்த காவல் நிலையத்தின் வாசலில் காத்திருக்கிறார்கள் .என்ன காரணமென்றால் அந்த 18 வயது...

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும்? – டி.டி.வி.தினகரன் கேள்வி

நீட் தேர்வுக்கு பயிற்சி கூட பெற முடியாத நிலையில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக...

சென்னையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பலி.. தொடரும் மரணங்கள்!

தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த...
Open

ttn

Close