ராமதாஸை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!

 

ராமதாஸை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான ராமதாஸ் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக வரும் சட்டமன்ற தேர்தலிலில் கூட்டணியை தொடர சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

ராமதாஸை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!

இந்த சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சந்தித்து பேசுவதாக இருந்தது. அப்போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% உள்இடஒதுக்கீடு வழங்க பாமக தரப்பில் வலியுறுத்தப்படவிருந்தது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், இதனால் இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.