ரியல் ஹீரோ சோனு சூட்டுக்கு ராமதாஸ் பாராட்டு

 

ரியல் ஹீரோ சோனு சூட்டுக்கு ராமதாஸ் பாராட்டு

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக இருக்கிறார் நடிகர் சோனு சூட். பொதுவாகவே உதவும் குணம் கொண்ட சோனு சூட், கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்துவரும் உதவிகளால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஊரடங்கினால் பன்னாட்டு நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதால், வேறு வழியின்றி காய்கறி வியாபாரம் செய்துவந்த சாரதா என்று பெண்ணுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்துகொடுத்தார். ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக தன் மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு, ஒரு டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார் சோனு. மேற்கு வங்காலத்தில் மழையினால் வீடு இழந்த பெண்ணுக்கு வீடு கட்டித்தருவதாக உறுத்தியளித்துள்ளார்.

ரியல் ஹீரோ சோனு சூட்டுக்கு ராமதாஸ் பாராட்டு

ஊரடங்கின் தொடக்கத்தில் இருந்தே, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல பஸ், ரயில், விமான வசதிகளை ஏற்படுத்தி உதவி வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கித் தவித்து வந்ததைக்கேள்விப்பட்ட சோனு சூட், தனி விமானம் மூலம் அவர்களை சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்தார். அதன்படி, அனைவரும் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். சோனு சூட்டின் இந்த செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், ரியல் ஹீரோ சோனு சூட்டுக்கு, ‘’ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த பல வாரங்களாக தவித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை இந்தி திரைப்பட நடிகர் சொந்த செலவில் தனி விமானம் அமர்த்தி சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது தொடர் சேவை வியக்க வைக்கிறது. பாராட்டுகள்!’’என்று தெரிவித்துள்ளார்.