தருமபுரி எம்.பி அலுவலகத்தை தாக்கத் தூண்டும் ராமதாஸ்… செந்தில்குமார் குற்றச்சாட்டு

 

தருமபுரி எம்.பி அலுவலகத்தை தாக்கத் தூண்டும் ராமதாஸ்… செந்தில்குமார் குற்றச்சாட்டு

வன்னியர்களின் சின்னமான அக்னி கலசத்தை தி.மு.க எம்.பி அவனமாப்படுத்திவிட்டதாக கூறி அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மேலும், எம்.பி அலுவலகத்தை தாக்கும்படி பா.ம.க தொண்டர்களுக்குத் தலைமை உத்தரவிட்டிருப்பதாக தி.மு.க எம்.பி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

தருமபுரி எம்.பி அலுவலகத்தை தாக்கத் தூண்டும் ராமதாஸ்… செந்தில்குமார் குற்றச்சாட்டுபா.ம.க இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய புஜத்தில் தீச்சட்டி கலசத்தை பச்சை குத்தியது போன்ற படத்தை சிலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அது உண்மையான புகைப்படம் என்றும் கூறப்படுகிறது. இதை தி.மு.க தருமபுரி எம்.பி தன்னுடைய ட்விட்டடர் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்திருந்தார்.

http://


தற்போது வன்னியர் சமுதாயத்தின் அடையாளமான அக்னி கலசத்தை செந்தில்குமார் எம்.பி அவமானப்படுத்திவிட்டதாக பா.ம.க-வினர் தருமபுரியில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும், செந்தில்குமாரை எம்.பி-யாக்கிய ஸ்டாலினுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி எம்.பி அலுவலகத்தை தாக்கத் தூண்டும் ராமதாஸ்… செந்தில்குமார் குற்றச்சாட்டுஇந்த நிலையில் தன் அலுவலகத்தின் மீது பா.ம.க தலைமை அதாவது டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றவர்கள் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பா.ம.க நிர்வாகிகளைத் தூண்டிவிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி பாமக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து எந்த போராட்டமும் நடத்தவில்லை என்று வருத்தப்பட்டு,
நீங்கள் எல்லாம் அந்நியரா என சாதி உணர்வை தூண்டி எனது அலுவலகத்தை தாக்க சொல்லி கட்டளையிட்டுறிகிரர்,

தருமபுரி எம்.பி அலுவலகத்தை தாக்கத் தூண்டும் ராமதாஸ்… செந்தில்குமார் குற்றச்சாட்டு
நீங்கள் செய்யவில்லை என்றால் வெளிவட்டத்து ஆட்களை இறக்குவததாக எச்சரித்து உள்ளார்” என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து பதிவிட்டுள்ளார். அதில், “வன்னியர் சங்கத்தினரை அடியாட்களைப் போல பயன்படுத்தும் அன்புமணியையும் ராமதாசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.