“ஆர்எஸ்எஸ் போல் செயல்படுங்கள்” பாமகவினனருக்கு ராமதாஸ் அட்வைஸ்!

 

“ஆர்எஸ்எஸ் போல் செயல்படுங்கள்” பாமகவினனருக்கு  ராமதாஸ் அட்வைஸ்!

”அரசியல் மாற்றத்தை காண முடியாதா” ? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“ஆர்எஸ்எஸ் போல் செயல்படுங்கள்” பாமகவினனருக்கு  ராமதாஸ் அட்வைஸ்!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் மாநில ,மாவட்ட ,ஒன்றிய,நகர நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர் . 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமகவை நிலைப்பாடு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு பாமகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆர்எஸ்எஸ் போல் செயல்படுங்கள்” பாமகவினனருக்கு  ராமதாஸ் அட்வைஸ்!

இந்நிலையில் பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், “ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்கு தெரியாமல் தேர்தல் பணிகளை செய்வது போல் பாமகவினர் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் பாமக தோல்வி அடைந்ததற்கு காரணம் நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணிகளை செய்யாததுதான். பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்விக்கும் இதுவே காரணம். தனியாக தேர்தலில் நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும்? அரசியல் மாற்றம் என்ற என் நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா?அரசியல் மாற்றத்தை என்னால் காண முடியாதா? “என்றார்.