ராம கோபாலன், இல கணேசன் நலம் பெற வேண்டும்! – கி.வீரமணி விருப்பம்

 

ராம கோபாலன், இல கணேசன் நலம் பெற வேண்டும்! – கி.வீரமணி விருப்பம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் இல கணேசன் மற்றும் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் நலம் பெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை விருப்பம் தெரிவித்துள்ளார்.

ராம கோபாலன், இல கணேசன் நலம் பெற வேண்டும்! – கி.வீரமணி விருப்பம்


இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க மூத்த தலைவரும் எம்.பி-யுமான இல.கணேசனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம்.

ராம கோபாலன், இல கணேசன் நலம் பெற வேண்டும்! – கி.வீரமணி விருப்பம்

அவர் விரைவில் நலமடைந்து பொதுப் பணியைத் தொடர வேண்டும் என்று நம் விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏற்கனவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் நலம் பெற்று மீண்டும் தன் பொதுவாழ்வைத் தொடர வேண்டும் ன்று விரும்புகிறோம். கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒரு போதும் தடையாக இருக்கவே கூடாது” என்று கூறியுள்ளார்.