தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை இயக்கமாக்கிய ராம கோபாலன்!

 

தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை இயக்கமாக்கிய ராம கோபாலன்!

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். தமிழகத்தில் மதம் சார்ந்த அரசியல் நிகழ்வுகளை கூர்மைப்படுத்திய தலைவராக விளங்கிய ராம கோபாலன, கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை இயக்கமாக்கிய ராம கோபாலன்!

தமிழத்தில், பெரியார் இயக்கங்களும், திரவிட கருத்துகளும் வலுவாக இருந்த நாட்களில், இந்து முன்னணி என்கிற அமைப்பை நிறுவியதுடன், தொடர்ந்து அந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் மதம் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

1980 ஆம் ஆண்டில், தென்காசி அருகே, தே. மீனாட்சிபுரம் கிராமத்தில் மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக தலித் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மதம் மாறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை வெடித்தது. அந்த நிகழ்வில் இருந்துதான், இந்து முன்னணி என்கிற அமைப்பு தமிழகத்துக்கு தெரியத் தொடங்கியது.

தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை இயக்கமாக்கிய ராம கோபாலன்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலகங்கள் நடப்பதற்கு காரணமாக இருந்தவர் ராமகோபாலன். ஒவ்வொரு கிராமமாக சென்று, விநாயகர் சிலைகளை நிறுவி, ஊர்வலங்களை நடத்தி தற்போது அதை மிகப்பெரிய இயக்கமாக மாற்றியவர்.

1990 களில் ராமஜென்மபூமி ரத யாத்திரை போது, தமிழகத்தில் முன்னின்று ரத யாத்திரைகளை நடத்தியர். அவரது வழிகாட்டுதல்களில்தான் தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வளரத் தொடங்கின. தற்போது தமிழக பாஜகவில் உள்ள பல தலைவர்களும் அவரது வழிகாட்டுதலை பெற்றவர்கள்தான்.

தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை இயக்கமாக்கிய ராம கோபாலன்!

ராம கோபாலனின் கோட்பாடுகள் தான் என்னை முழு மனிதனாக ஆக்கியது என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷணன் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு பகவத் கீதை புத்தகத்தை அளிக்கும் போராட்டத்தை நடத்தியுள்ளார். திமுகவை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

மத அரசியல் பிரச்சினைகளை ஊக்குவிக்கிறார் என பல விமர்சனங்களும் ராம கோபாலன் மீது உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.