மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்!

 

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்!

கடந்தவாரம் ராம் விலாஸ் பஸ்வானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தேவைப்பட்டால் அடுத்த சில வாரங்களிலும் மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தியின் தலைவருமான சிராக் பஸ்வான் கடந்த 4 நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்!

இந்நிலையில் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான்தான் காலமானதாக சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மிஸ் யூ அப்பா எனக் குறிப்பிட்டுள்ளார். பீகாரை சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்தார்.