மக்களின் உயிரை காக்கத்தான் இப்பம் முன்னுரிமை… பீகார் தேர்தலை நடத்த வேண்டாம்.. பஸ்வான் கட்சி கடிதம்

மக்களின் உயிரை காக்கத்தான் இப்பம் முன்னுரிமை… பீகார் தேர்தலை நடத்த வேண்டாம்.. பஸ்வான் கட்சி கடிதம்

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் பதவி காலம் வரும் அக்டோபரில் முடிவடைய உள்ளது. இதனால் பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக சட்டப்பேரவை தேர்தலை அடுத்த சில மாதங்களில் தேர்தல் ஆணையம் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு தேர்தலை நடத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லை என தெரிகிறது.

மக்களின் உயிரை காக்கத்தான் இப்பம் முன்னுரிமை… பீகார் தேர்தலை நடத்த வேண்டாம்.. பஸ்வான் கட்சி கடிதம்

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்தி கட்சி, பீகாரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது மக்களிள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. பஸ்வான் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பீகாரில் தேர்தலை நடத்துவது வேண்டுமென்றே மக்களை மரணத்தை நோக்கி தள்ளுவதாகும்.

மக்களின் உயிரை காக்கத்தான் இப்பம் முன்னுரிமை… பீகார் தேர்தலை நடத்த வேண்டாம்.. பஸ்வான் கட்சி கடிதம்

இப்போது மக்களின் உயிரை காப்பாற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும். கோவிட்-19 நெருக்கடி மற்றும் மாநிலத்தில் வெள்ளத்தை சமாளிப்பதற்கும் வளங்கள் கவனம் செலுத்த வேண்டும், மாநிலத்தில் தேர்தலை நடத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்துவதற்கு ஆதரவாக உள்ளது. மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் அந்த கட்சி செய்து வருகிறது. அதேசமம் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.