ராமர் கோயில் பூமி பூஜை.. வழக்கு போட்டவர் உள்பட இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு.. எதிர்க்கட்சிகளுக்கு நோ

ராமர் கோயில் பூமி பூஜை.. வழக்கு போட்டவர் உள்பட இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு.. எதிர்க்கட்சிகளுக்கு நோ

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் 5 மண்டபங்களுடன் ராமர் கோயில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜை.. வழக்கு போட்டவர் உள்பட இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு.. எதிர்க்கட்சிகளுக்கு நோ

மேலும், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் ராமர் கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய மூத்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. தலைவர்களுக்கு ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ரித்தேஷ் பாண்டேவை தவிர்த்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுக்கவில்லை.

ராமர் கோயில் பூமி பூஜை.. வழக்கு போட்டவர் உள்பட இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு.. எதிர்க்கட்சிகளுக்கு நோ

ஆனால், ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள வருமாறு அயோத்தி வழக்கை தொடுத்தவர் மற்றும் பிரபலமான முஸ்லீம் தலைவர்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட முஸ்லீம் தலைவர்களில் உத்தர பிரதேச சன்னி மத்திய வக்ப் வாரியத்தின் தலைவர் ஜாபர் பாரூக்கி மற்றும் உ.பி. ஷியா மத்திய வக்ப் வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி ஆகியோரும் அடங்குவர். சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கும் ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்ள அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.