ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா… அயோத்தி எல்லைகள் மூடப்பட்டது!

ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதையொட்டி அயோத்தி நகருக்கு புதிதாக யாரும் நுழைவதைத் தடுக்க எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் வருகிற 5ம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தடுக்க பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகளை அனுப்பியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதைத் தொடர்ந்து, அயோத்தியின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளது. எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராம பக்தர்கள் பலரும் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்க ஆர்வம்காட்டி வருகின்றனர்.


இதனால் பலரும் நடந்தே அயோத்திக்கு வரத் தொடங்கியுள்ளனர். இவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கரசேவை நடந்த போது அயோத்தி எல்லைகள் மூடப்பட்டன. ஆனால், ரயில் பாதை வழியாக, சிறு சாலைகள், சராயு ஆற்றைக் கடந்து என ஏராளமான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். தற்போது அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


அயோத்தியில் புதிய நபர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 6ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர்கோவில் பிரதான பூசாரிக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதால், சுகாதார ஏற்பாடுகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Most Popular

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...