ஜெயலலிதாவின் இறப்புக்கு பின் சதி நடந்திருக்கிறது! முன்னாள் தலைமை செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் இறப்புக்கு பின் சதி நடந்திருக்கிறது! முன்னாள் தலைமை செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஜெயலலிதாவின் இறப்புக்கு பின் சதி நடந்திருக்கிறது! முன்னாள் தலைமை செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்தது? யார் என்ன நினைத்தார்கள்? என தெரியவில்லை. நான் யாரையும் பழி சுமத்த விரும்பவில்லை. ஆனால் ஒரு சதி நடந்திருக்கிறது. இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது நான் சொல்வேன். தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிகழ்வு ஒரு தவறான நடவடிக்கை. அது யார் உத்தரவிட்டு யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியைச் சுமத்தி இருக்கிறார்கள். யார் செய்தார்கள் என்று இப்போது வரை என்னிடம் தகவல் இல்லை. நான் குற்றம் செய்யாதவன். ஆனால் என்னை வெளியேற்றினார்கள்” எனக் கூறினார்.