உத்தவ் தாக்கரே ரூ.1 கோடி தர்றேன்னு சொன்னாரு.. ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை.. ராமர் கோயில் டிரஸ்ட்

உத்தவ் தாக்கரே ரூ.1 கோடி தர்றேன்னு சொன்னாரு.. ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை.. ராமர் கோயில் டிரஸ்ட்

மகாராஷ்டிராவின் முதல்வரும், சிவ சேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே கடந்த மார்ச் மாதம் அயோத்தி சென்று இருந்தார். அப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக மாநில அரசிடமிருந்து அல்ல தனது சொந்த அறக்கட்டளையிலிருந்து ரூ.1 கோடி வழங்குவதாக உத்தவ் தாக்கரே வாக்குறுதி கொடுத்தார். அவர் சொல்லி 4 மாதங்கள் தாண்டி விட்டது மேலும் ராமர் கோயில் கட்டுமான பணிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ளது.

உத்தவ் தாக்கரே ரூ.1 கோடி தர்றேன்னு சொன்னாரு.. ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை.. ராமர் கோயில் டிரஸ்ட்

ஆனால் உத்தவ் தாக்கரேவிடமிருந்து இன்னும் ஒரு ரூபாய் கூட பெறவில்லை என ராமஜென்ம பூமி அறிக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராமர் கோயில் பூமி பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டன, கோயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டதிலிருந்து (உத்தவ் தாக்கரே ரூ.1 கோடி வழங்குவதாக வாக்குறுதி) ஒரு ரூபாய் கூட இன்னும் பெறவில்லை என தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே ரூ.1 கோடி தர்றேன்னு சொன்னாரு.. ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை.. ராமர் கோயில் டிரஸ்ட்

ராமர் கோயில் பூமி பூஜையை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடத்தலாம் என கடந்த சில தினங்களுக்கு உத்தவ் தாக்கரே தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவை அகில் பாரதிய சந்த் சமிதி பொது செயலாளர் ஜிதேந்திரநந்த் சரஸ்வதி கடுமையாக தாக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு தகுதியற்ற மனிதன் ஒரு பெரிய மனிதரின் மரபை ஆக்கிரமித்து வருகிறார். உத்தவ் கான்வென்ட் பள்ளியில் படித்தார். மெய்நிகருக்கும், நிஜத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அவரால் புரிந்து கொள்ள முடியாது. பூமியை தொடாமல் பூமி பூஜையை செய்ய முடியும்? என தெரிவித்தார்.