இந்தியாவின் எதிரிகளுக்கு பயனளிக்கும் வகையில் காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது மிகவும் துரதிருஷ்டவசமானது…..பா.ஜ.க.

இந்தியாவின் எதிரிகளுக்கு பயனளிக்கும் வகையில் காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது மிகவும் துரதிருஷ்டவசமானது…..பா.ஜ.க.

கடந்த திங்கட்கிழமையன்று இரவு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர். ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த புதன்கிழமை காலையில்தான் டிவிட்டரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இந்தியாவின் எதிரிகளுக்கு பயனளிக்கும் வகையில் காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது மிகவும் துரதிருஷ்டவசமானது…..பா.ஜ.க.

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், உங்களது (ராஜ்நாத் சிங்) டிவிட்டில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் ஏன் இந்திய ராணுவத்தை அவமதித்தீர்கள்?. இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் எடுத்து கொண்டீர்கள்?. வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். ஆனால் அதனை மறைத்து ராணுவத்தை ஏன் நட்பு ஊடகங்கள் குற்றம் சாட்ட வேண்டும்?. மத்திய அரசை குற்றம் சாட்டாமல் ராணுவத்தை ஏன் நட்பு ஊடகங்கள் பழி சுமத்தின? என பதிவு செய்து இருந்தார்.

இந்தியாவின் எதிரிகளுக்கு பயனளிக்கும் வகையில் காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது மிகவும் துரதிருஷ்டவசமானது…..பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பான எதிர்கட்சிகளின் செயல்பாடு மிகவும் துரதிருஷ்டவசமானது. முழு தேசமும் ராணுவம் மற்றும் அரசுடன் நிற்கும்போது, இந்தியாவின் எதிரிகளுக்கு பயனளிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சி அறிக்கை வெளியிடுவது துரதிருஷ்டவசமானது. ராகுல் காந்தியின் அறிக்கையை தங்களது தரப்பு வாதத்துக்கு அவர்கள் (எதிரிகள்) பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.