• April
    03
    Friday

Main Area

Main



அடேங்கப்பா! ஒரு வேளை சாப்பாட்டுக்கு 10 லட்சம் செலவு செய்த பிரபல நடிகை! 

rakul preet
rakul preet

சென்னை: நடிகை ரகுல் பிரித் சிங் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூ.10 லட்சம் பில் கட்டிய சம்பவத்தை பேட்டியில் கூறியுள்ளார்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ரகுல் பிரித் சிங்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து தேவ் படத்தில் நடித்துள்ளார். இது காதலர் தினமான நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்த அவர், லண்டனில் உள்ள ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றபோது பில் மட்டுமே ரூ. 10 லட்சம் வந்தது. 7 பேருக்கு இவ்வளவா என அந்த பில்லைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இனி அந்த ஹோட்டலுக்கு சாப்பிடவே போகக்கூடாது என முடிவெடுத்து விட்டதாகக் கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.