• April
    03
    Friday

Main Area

Main



அசைவ உணவை முற்றிலும் வெறுத்த ரகுல் ப்ரீத் சிங்க்! காரணம் இதுதானாம்

rakul-preet-singh
rakul-preet-singh

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ராகுல் பரீட் சிங்க். தான் சைவ உணவிற்கு மாறிவிட்டதாக திடீரென்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், தான் வாழ்வில் எடுத்ததிலேயே இதுதான் சிறந்த முடிவு என்றும் கூறியுள்ளார்.

rakul-preet-singh-09

“நான் ஒரு தீவிரமான அசைவ விரும்பி. எனக்கு காய்கறிகள் சாப்பிடுவதே பிடிக்காமல் இருந்தது. இறைச்சி என் வாழ்வில் ஒரு முக்கிய இருந்தது, குறிப்பாக முட்டை. இருந்தாலும் ஒருநாள் முற்றிலும் சைவ உணவிற்கு மாற முடிவு செய்தேன். இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல”. இப்போது, ​​நான் இலகுவாகவும், முழு ஆற்றலுடன் இருப்பதாகவும் உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

rakul-preet

“ஷூட்டிங்கிற்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் எல்லா இடங்களிலும் சைவ உணவு கிடைக்கிறதா?” என்ற கேள்விக்கு, “மும்பையில் ஷூட்டிங் இருந்தால் வீட்டிலிருந்தே வெஜிடபிள் ஷேக், பழங்கள், சாப்பாடு எடுத்து செல்வேன். வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் பிரச்சனை. அங்கும் க்ரில் சிக்கன் மீன் போன்றவை கிடைக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல கிடைக்கக்கூடிய காய்கறிகளை வைத்து சமைத்து சாப்பிட்டுக்கொள்வேன்” என்று பதிலளித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.